சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் சனத் ஜெயசூரியாவின் சாதனையை சங்கக்காரா முறியடித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் குமார் சங்கக்காரா 76 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் 3வது இடத்தில் இருந்த இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூரியாவை (13,430) அவர் முந்தியுள்ளார்.
இதுவரை 394 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சங்கக்காரா 13,490 ஓட்டங்களை குவித்து 3வது இடத்தில் இருக்கிறார். முதல் 2 இடங்களில் முறையே சச்சின் (18,426), ரிக்கி பொண்டிங் (13,704) உள்ளனர்.
