கொழும்பு அரசியலில் அடுத்த 72 மணிநேரம் தீர்க்கமானதாக இருக்கும் என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர். இந்த 72 மணிநேரத்துக்குள், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து பிரபலமான மிகவும் முக்கிய அமைச்சு அல்லது சிரேஷ்ட அமைச்சு பதவிகளை வகிக்கின்ற சிலர் , எதிரணியுடன் இணைந்துகொள்ளவிருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அடுத்த இரண்டொரு நாட்களுக்குள் ஆளும் கட்சியைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலர், எதிரணியுடன் இணைந்துகொள்ளவிருப்பதாக முன்னாள் பிரதியமைச்சரும் எதிரணியுடன் இணைந்துகொண்டவருமான நந்தமித்ர ஏக்கநாயக்க தெரிவித்தார்.

No comments:
Post a Comment