கொழும்பிலுள்ள 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அருகில் வைத்து, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பணம் கொடுத்ததாக போதைபொருள் வர்த்தகரான வெலே சுதா என்று அழைக்கப்படும் சமந்த குமார தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் செவ்வாய்கிழமை(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.
