அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் தமிழ் கிராமமான மல்வத்தையில் அமைந்துள்ள பண்டைய ஆலயம் ஒன்றிலுள்ள பிள்ளையார் சிலையின் கண்கள் திறந்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.
மல்வத்தை முதலாம் வட்டாரத்தில் உள்ள குளத்தடி பிள்ளையார் ஆலயத்தில் உள்ள பழம்பெரும் பிள்ளையார் சிலையின் இரு கண்களே இவ்வாறு திறந்துள்ளது.
இந்த ஆலயமானது தொன்மையானதாகவும் வேடர்களால் வழிபட்டதாகவும் ஆலய வரலாறு கூறுகின்றது.
தமிழர்களின் எல்லைப்பகுதியாகவும் உள்ள இப்பிரதேச ஆலயத்தின் அதிசயத்தினை காண்பதற்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.


No comments:
Post a Comment