சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அரசாங்கத் தரப்பு செய்திகள் இதனைத் தெரிவிக்கின்றன.
அவருக்கு எதிர்கட்சியினால் 100 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இன்றையதினம் அமைச்சர் நவீன் திஸாநாயக்க அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொண்டார்.
இந்த நிலையில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த வாரம் எதிர்கட்சிகளுடன் இணைந்துக் கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment