November 21, 2014

காலம் அனைத்தையும் மாற்றும்: மைத்திரிபால

'காலம் பலவற்றை மாற்றுகின்றது. நான் கலந்துகொள்ளும் இறுதி அரசாங்க உற்சவம் இதுவாகவும் இருக்கலாம். நாம் காலத்திடம் எல்லாவற்றையும் சமர்ப்பித்துவிட்டு காத்திருப்போம்' என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் பத்தரமுல்லயில் இடம்பெற்ற நிகழ்வின் போது தெரிவித்தார். 

சொத்துக்களை குவிப்பதற்காக மக்கள் எமது கைகளில் அதிகாரத்தை வழங்கவில்லை. ஊழல், மோசடிகளைச் செய்வதற்காகவும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. அதிகாரம் கிடைத்துவிட்டது என்ற மமதையில் அந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அந்த அதிகாரத்தில், மக்களை அடிபணியச் செய்யவும் கூடாது என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். 

அத்துடன், அதிகாரத்தின் போதையில் நாம் சிக்குண்டிருக்கக்வும் கூடாது என்று தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால, பொதுமக்களின் பொறுப்பாளன், ஒருபோதும் அந்த மக்களை அடிமைகளாக்கி நசுக்கக் கூடாது' என்றுத் கூறினார். 

No comments:

Post a Comment