November 21, 2014

மகிந்த வெற்றிக்கு கோத்தவின் அதிரடி திட்டம் -பலியாகுவது யார்?

மகிந்த வெற்றியை எப்பாடுபட்டாவது ஏற்படுத்திக்கொள்ள கோத்த முயற்சி கொலைகள் அதாவது அரசியல் கொலைகள் செய்து புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் அவர்களே கொலைகள் செய்வதாக பரப்புரை செய்வதற்கு தயாராகுவதாக தகவல் கசிந்துள்ளது.  ஜனவரி மாதம் நடைபெறப் போகும் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கோக்தபாஜா ராஜபக்சாவால் அரங்கேற்றப் போகின்ற இந்த நிகழ்வுகள் தமிழரை மட்டும் அல்ல சிங்களவரையும் அதிர வைக்கும்.

வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்சா தோல்வியடைந்தால், அந்தப் பரம்பரையின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக அமையும். அப்படி ஒரு நிலைமையை வரவிடாமல் தடுப்பதற்காக கோத்தபாஜா எதையும் செய்ய துணிந்துவிட்டார். இந்த ராஜபக்சா குடும்பம் அரசியல் கொலைகளை செய்து அதனை விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் வீண்பழிகள் போடும் திட்டத்தை வகுத்துள்ளார்கள்.

இதை தடுக்க மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் உலக நாடுகள் முன் வரவேண்டும் அப்போதுதான் இதை தடுக்க முடியும்