November 23, 2014

ஜப்பானில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது



ஜப்பானின் நாகானோ பகுதியில் உள்ள ஹகுபா கிராமத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ரிச்டர் மானியில் 6.2 மெக்னிரியுட் அளவில் இந்த நில அதிர்வு பதிவானதாக பசுபிக் பிராந்திய புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் 39 பேர் காயமடைந்திருப்பதாகவும், அவர்களில் ஏழு பேரின் நிலைமை மோசமாக இருப்பதாகவும் ஜப்பானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த கிராமத்தில் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து 300 பேர் கொண்ட மீட்பு குழு ஒன்றினால், மீட்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

No comments:

Post a Comment