October 03, 2014

எபோலா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிப்பு

எபோலா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்திருப்பதாக, தாய்லாந்தின் மருத்துவ ஆய்வு மருத்துமனை ஒன்று அறிவித்துள்ளது. இது தொடர்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று பங்கொக்கில் நடைபெற்றது. இதன் போது இந்த மருந்துகள் எபோலாவுக்கு எதிராக சிறப்பாக தொழிற்படுவதாக வைத்தியர்கள் அறிவித்தனர். எபோலாவினால் பாதிக்கப்படும் கலன்களில் உட்புகக்கூடிய அளவும் நுண்ணியதாக தயாரிக்கப்பட்ட எதிர்ப்பு மருந்து, அந்த கலன்களின் ஊடாக இபோலா வைரஸின் புரதவளத்தையும் அழிக்கும். இதன் மூலம் இந்த நோய் முழுவதுமாக கட்டுப்படுத்தப்படும் என்று. இந்த மருந்துகள் எதிர்வரும் ஒரு வருட காலப்பகுதிக்குள் பாரிய அளவில் தயாரிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment