யாழ்.பல்கலைக்கழகத்தினை விடுமுறை வழங்கி இம்முறையும் நவம்பர் மாதத்தில் மூடிவிட நிர்வாகம் பீடாதிபதிகளிற்கு பணிப்புரை விடுத்துள்ளது. மாணவர்களிற்கான விரிவுரை நேர அட்டவணைகளில் மாற்றம் செய்யப்பட்டு குறித்த மாவீரர் வார காலப்பகுதியில் பரீட்சை விடுமுறை வழங்கப்பணிப்பட்டுள்ளது.
அனைத்து பீடங்களுக்கும் ஒரேநேரத்தில் பரீட்சை விடுமுறை வழங்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் பீடாதிபதிகளுக்கும் பணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் காரணமின்றி பல்கலைக்கழகத்தை இழுத்து மூடியமை மாணவர்களிடையேயும் மக்களிடையேயும் சீற்றத்தை தோற்றுவித்ததையடுத்து தற்போது பரீட்சை விடுமுறைகளை வழங்கி சீராக்க முற்பட்டுள்ளமை தெரியவருகிறது.
