வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்கள் முன்கூட்டிய அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
வடக்கிற்கு பயணம் செய்யும் சில வெளிநாட்டவர்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே முன்கூட்டிய அனுமதியுடன் வெளிநாட்டவர்கள் வடக்கிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். எதிர்காலத்தில் வடக்கு பயணம் செய்யும் வெளிநாட்டுப் பிரஜைகள் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொண்டதன் பின்னரே வடக்கிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
