September 19, 2014

வேலணை பிரதேச சபையில் மனித எச்சங்கள்

வேலணைப் பிரதேச சபையில் வளவில் உள்ள இலங்கை மின்சார சபை தனது மின்மாற்றியை இடம்மாற்றுவதற்கு நேற்று பிற்பகல் குழி வெட்டிய போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து உடனடியாக குழி தோண்டு பணி நிறுத்தப்பட்டு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. இன்று காலை முதல் பொலிஸ் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 

இதேவேளை, கடந்த பல ஆண்டுகளாக கடற்படை மற்றும் தமிழ் அரசியல் கட்சி ஒன்றும் குறித்த பகுதியில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.