மிக அவசரமான வேண்டுகை. யாழ்ப்பாணத்தில் ஒக்டோபர் மாதம் 7ம் திகதி வெளிநாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்கள் பங்கு கொள்ளும் வர்த்தக சந்தை இடம்பெறவிருக்கிறது, அதற்குரிய சுற்றுநிருபம் சகல பிரதேச அலுவலகங்களை வந்தடைந்துள்ளது, உடனடி நேர்முகபரீட்சை நாடாத்தப்படவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக 18 வயதுக்கு மேற்பட்ட யாழ்ப்பாணத்து பெண்களை இலக்கு வைத்து நடாத்தப்பட இருக்கிற இந்த கலாசார அழிப்பு நிகழ்வை சம்பந்தபட்ட அரசியல் தலைமைகள் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் இவ்வாறான சமூக பிறழ்வை ஏற்படுத்தும், பண்பாட்டு வாழ்க்கை கோலங்களை சிதைக்கும் வழிகாட்டல்கள் எதிர்காலத்தில் யாழ் மண்ணில் நடாத்தபடுவதை தடுக்க செயல்திட்டங்கள் அமைக்க வேண்டும். கலாசார பாரம்பரிய விழுமியங்களை அழிக்கும் இதுபோன்ற திட்டமிட்ட நடவடிக்கைகளை கையாள தமிழ் அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி ஓர் நடவடிக்கை குழுவை அரச அதிபர் மற்றும் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட அமைத்து அதனூடு செயலாற்றுவது மிக அவசியமாகிறது. மேலும் கைத்தொழில் முன்னேற்ற வழிகாட்டல் போன்றவற்றை நிகழ்த்துதலே மிகபொருத்தப்பாடாக அமையும்.
முஸ்லீம் சகோதரிகளின் ஹிஜாப் அணிவதை நிறுத்துவது எவ்வாறு முஸ்லீம் சமூகத்தால் பார்க்கபடுகிறதோ அதே போன்ற கலாசார பிறழ்வை ஏற்படுத்தும் செயலே இதுவாகும்.

No comments:
Post a Comment