August 14, 2014

நவ்ரூ தீவு புகலிடக் கோரிக்கையாளர் முகாமில் சிறுவர் துஸ்பிரயோகம்!

திட்டமிட்ட அடிப்படையில் நவ்ரூ தீவுகளில் சிறுவர் புகலிடக் கோரிக்கையாளர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சிறுவர் உரிமை அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. புகலிட முகாமில் பணியாற்றி வரும் பணியாளர்கள், இது தொடர்பிலான தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளனர்.
 
சக புகலிடக் கோரிக்கையாளர்கள் சிறுவர் புகலிடக் கோரிக்கையாளர்களை அச்சுறுத்தி வருவதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டு;ள்ளனர். 
 
துன்புறுத்தல் சம்பவங்களை முகாமின் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என குற்றம் சுமத்தியுள்ளனர். பெண் ஒருவர் அச்சுறுத்தப்பட்டதாகவும், அச்சுறுத்திய நபர்கள் அந்தப் பெண் தங்கியிருக்கும் முகாமிற்கு அருகாமையில் தங்க வைக்கப்பட்டுள்ளாகவும் தெரிவித்துள்ளனர்.
 
பெரும் எண்ணிக்கையிலான சிறுவர் சிறுமியர் பாதுகாப்பற்ற நிலைமையை உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். போதியளவு உணவு வழங்கப்படுவதில்லை எனவும், போதியளவு சுகாதார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும் மலசலகூட வசதிகள் கூட ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.