ஈக்குவடோரை 5.1 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி செவ்வாய்கிழமை தாக்கியதில் குறைந்தது இருவர் பலியானதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேசமயம் மேற்படி பூமியதிர்ச்சியால் குயிடோ நகருக்கு வெளியிலுள்ள கல் அகழ்வு தளமொன்றில் ஏற்பட்ட மண்சரிவுகளில் மேலும் மூவர் சிக்கியுள்ளனர்.
இந்த பூமியதிர்ச்சியால் கட்டடங்கள் நடுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியேறியுள்ளனர். மேலும் மண்சரிவுகளால் வீதிகள் மூடப்பட்டதால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மண்சரிவொன்றில் சிக்கிக்கொண்ட காரிலிருந்த சாரதி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த பூமியதிர்ச்சி குயிடோ நகரின் வடகிழக்கே 23 கிலோமீற்றர் தொலைவில் 7.7 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூமியதிர்ச்சி தாக்கியுள்ளது.

