இங்கிலாந்து அல்லது அமெரிக்காவைச் சேர்ந்த பிணையாளியின் தலையை வெட்டப் போவதாக பெண் தீவிரவாதி ஒருவர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துள்ள இங்கிலாந்தை சேர்ந்த கதீஜா டேர் (Kathija Dare- age 22) என்பவர் லண்டனில் லெவிஷாம் (Lewisham)பகுதியில் முன்பு வசித்து வந்துள்ளார்.
இவரது கணவர் சுவீடனைச் சேர்ந்தவர், இவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்டவர்தான். தற்போது இருவரும் ரக்கா நகரில் தங்களது மகனுடன் இருக்கின்றனர்.
முஹாஜிரா பி ஷாம் (Muhajirah fi sham) என்ற பெயரில் டீவிட்டரில் இருக்கும் இந்த பெண்மணி கூறியதாவது, அமெரிக்க பத்திரிகையாளரை கொன்றதால் அல்லாவுக்கே புகழ் உண்டாகட்டும்.
இங்கிலாந்து இப்போது ஆடிப் போயிருக்கும், தற்போது அமெரிக்கா அல்லது இங்கிலாந்து பிணையாளியின் தலையை வெட்டிக் கொன்று, அப்படிச் செய்த முதல் இங்கிலாந்துப் பெண் என்ற பெயரைப் பெற விரும்புகிறேன் என டீவிட் செய்துள்ளார்.
மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டு துண்டிக்கப்பட்ட தலைகள் அடங்கிய புகைப்படங்களையும் டீவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கப் பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலி (James Foley) தலை துண்டித்துக் கொல்லப்பட்ட காணொளி வெளியான மறுநாள் இவர் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

