கடந்த (22/04/2014)
திங்கள் கரணவாய் கிழக்கு கிராம அபிவிருத்தி அமைப்பின் மகளீர்
அமைப்பினை சந்தித்து கலந்துரையாடினார்
மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன். அவர்களிர்ற்கு தேவையான பொதி செய்யும் இயந்திரம் ஒன்றையும் அன்பளிப்பாக வழங்கினர். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்...
இன்று மீள் எழிச்சி திட்டத்தின் கீழ் நீங்கள்
அனைவரும் ஒற்றுமையாக செயற்படுவது வரவேற்கத்தக்கது. அனால் இன்று வடக்கின் பெரும் சாபகேடக இருப்பது
பெண் தலைமைத்துவமே ஆகும் இவ்வாறு பெண் தலைமைத்துவத்துடன் வாழும் பெண்கள் பாலியல்,
வறுமை, தனிமை என சொல்லேன துன்பத்தை
அனுபவிக்கின்றார்கள் ஒரு காலத்தில் களத்தில் நின்று எம் இனத்தை காப்பாற்றிய
பெண்கள் இன்று தன் குடும்பத்தை காப்பற்ற பெரும் திண்டடத்தை அனுபவிகின்றார்கள். யுத்தத்தால்
கணவனை இழந்தவர்களும் கணவன் காணமல் போய்யுள்ளவர்களும் என பட்டியல் படுத்தலாம். இவ்வாறான
குடும்பங்களுக்கு எந்தவிதமான மற்று திட்டங்களையும் இந்த அரசனது இது வரையும்
முன்னெடுக்கவில்லை மேலும் மூன்று வேளை சாப்பிட்டு மேடைகளில் பேசும் அரசியல்
வாதிகளும் சரி மேடை பேச்சலர்களும் சரி தங்களுக்கு ஏற்றத்தை போல பேசுகின்றார்களே
தவிர எந்தவிதமான ஆக்கபுர்வமான நடவடிக்கைகளையும் முன் எடுக்கவில்லை.
தனது குடும்பத்தை காப்பாற்ற சில பெண்கள் சமுகத்துக்கு
விரோதமான செயல்களில் ஈடுபடுகின்றாக்கள் இதனை நாம் 1௦௦% பிழை என்று சொல்லமுடியாது ஏன் எனில் அவளும்
ஒரு தாயவள் எந்த தாயும் தனது பிள்ளையின் பசியினை பொறுக்க மாட்டல் எனவே
இவர்களில் மீது குற்றம் சுமத்துவதை
நிறுத்தி கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் ஓரணியில்
நின்று இவ்வாறான குடும்பங்களிற்கு தேவையான வாழ்வாதார உதவிகளையும், சுயதொழில்
வாய்ப்புகளையும், தொழில் வாய்ப்புகளையும் உருவாக்கி கொடுத்து அவர்களது வாழ்வில்
ஒளியேற்ற அனைவரும் முன் வர வேண்டுமென கேட்கின்றேன். தெரிவித்து கொண்டார்.