April 30, 2014

ரயில் விபத்தில் 68 பேர் காயம்: ரயில் சேவைகள் பாதிப்பு

குருநாகல் பொத்துஹெர எனுமிடத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 68 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வவுனியா அதிசொகுசு ரயிலிலேயே ரஜரட்ட ரயில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

காயமடைந்தவர்கள் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த அனர்த்தத்தினால் வடபகுதிக்கான ரயில் சேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.