இலங்கை மீதான சுயாதீன விசாரணையை இந்தியா நிராகரிப்பதாகவும், இவ்வாறான ஒரு நிலைமை நாளை இந்தியாவுக்கும் வரலாம் என இந்திய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர்ந்தோர் அமைப்பிற்கு அடிமையாகியுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில், இந்தியாவின் பிரதிபலிப்பு சாதாரணமானது. தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல அபிவிருத்தி பணிகளுக்கு இந்தியா பாரிய ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. இந்தநிலையில், இலங்கைக்கு இந்தியா ஆதரவு அளிக்காவிட்டால், இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.