அமெரிக்காவினால் இலங்கை தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள யோசனையை முற்றாக ஆதரிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானம் மீது உரையாற்றும் போது இத்தாலி பிரதிநிதி இதனை கூறியுள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு அமைய இலங்கையில் போர் நடைபெற்ற போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீனமான விசாரணைகளை நடத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள், காணி சுவீகரிப்பு, மத சுதந்திரம், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பிலான இலங்கையின் மந்த கதியிலான செயற்பாடுகள் பற்றியும் இத்தாலி பிரதிநிதி இதன் போது கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.