March 23, 2014

வட்டுக்கோட்டைச் சுற்றிவளைப்பில் ஒருவர் கைது!

வட்டுக்கோட்டையில் நேற்று சனிக்கிழமை நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மன்னார்ப் பகுதியைச் சேர்ந்த காந்தலயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட காந்தலயன் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.