February 19, 2014

முதல்வர் ஜெயலலிதாவுடன் அற்புதம்மாள் சந்திப்பு

தனது மகன் பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு, முதல்வர் ஜெயலலிதாவிடம் அற்புதம்மாள் நேரில் நன்றி தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்தி:
'முதல்வர் ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சந்தித்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுத்தமைக்காக, தனது நன்றிகளை கண்ணீர் மல்க தெரிவித்துக்கொண்டார்.
"ஒரு அம்மாவின் உணர்வை புரிந்துகொண்டீர்கள் அம்மா. எனது மகன் என்னிடம் வந்து சேருவானா என்று பயந்திருந்தேன். அந்த பயம் இன்று போய்விட்டது அம்மா" என்று நெஞ்சம் நெகிழ நன்றி கூறினார்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment