February 17, 2014

த.தே.ம.மு வின் புதிய தலைவராக கஜேந்திரகுமார், பொதுச் செயலாளராக செ.கஜேந்திரன் இன்று மீண்டும் தெரிவு

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அதில் புதிய மத்திய செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது. பொதுச் சபைக்கூ ட்டம் தொடா்பில் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு.
16-02-2014
ஊடக அறிக்கை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2014ம் ஆண்டுக்கான புதிய மதிய செயற்குழு விபிரம்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 4வது வருடாந்தப் பொதுச் சபைக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (16-2-2014) வவுனியா நகரசபையின் கேட்போர் கூடத்தில் பி.ப 1.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. நிகழ்வுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமை தாங்கினார்.
ஆரம்ப நிகழ்வாக கட்சியின் கொடியினை கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஏற்றி வைத்தார். அடுத்த நிகழ்வாக தமிழ் மக்களது உரிமைக்காக உயர்த்தியாகம் செய்தவர்களை நினைவு கூர்ந்து ஈகச் சுடரேற்றப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றது. தொடர்ந்து வரவேற்பு நடனமும், வரவேற்புரையும் இடம்பெற்றது.
அடுத்து கட்சியின் வருடாந்தச் செயற்பாட்டு அறிக்கை கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்களால் வாசிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய நிர்வாக சபை உறுப்பினர்களதும், விசேட விருந்தினர்களதும் உரைகள் இடம்பெற்றது. விசேட விருந்தினர் கலாநிதி க.சிதம்பரநாதன் அவர்களது உரையினைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், துணைப் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் மணிசேகரன், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரது உரைகள் இடம்பெற்றது.
தமிழத்; தேசிய மக்கள் முன்னணியின் 2014 ஆம் ஆண்டுக்கான மத்திய செயற்குழு விபரம்
தலைவர்:- கஜேந்திரகுமார் பென்னம்பலம்
பொதுச் செயலாளர் :- செல்வராசா கஜேந்திரன்
துணைப் பொதுச் செயலாளர் ;:- சந்திரசேகரன் மணிசேகரன்
பெருளாளர்:- கனகையா கிருஸ்ணகுமார்
தேசிய அமைப்பாளர்:- விஸ்வலிங்கம் மணிவண்ணன்
பிரச்சாரச் செயலாளர்:- சிவகுரு இளங்கோ
உபதலைவர்கள்:- இ.எ.ஆனந்தராஜா, வி.இந்திராணி, சிவபாதம் கஜேந்திரகுமார், வி. றமணன், த.சுரேஸ்
உப செயலாளர்- தங்கராஜா காண்டீபன்
உப பெருளாளர்- முத்துலிங்கம் கஜேந்திரராஜா
நிர்வாகச் செயலாளர்- செல்வி மடோனா சந்தியோகு
இளையோர் அணித்தலைவர்- இன்னாசிமுத்து சத்தியசீலன்
மகளீர் அணிப் பொறுப்பாளர்- திருமதி பத்மினி சிதம்பரநாதன்
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்

No comments:

Post a Comment