கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் வெளியிடப்பட்டன. கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் யாழ். மாவட்டத்தில் யாழ்.ஹாட்லிக் கல்லூரி மாணவன் சிவஞான செல்வம் தினேஷ் உயிரியல் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட் டத்தில் முதலாவது இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 6 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
அதேவேளை யாழ். இந்துக் கல்லூரி மாணவன் இராஜசேகரன் யதுசன் கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளைப்பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாவது இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். இதனைவிட யாழ்.வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி நிதுஷா ஜெயக்குமார் வர்த்தகப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாவது இடத்தையும் அகில் இலங்கை ரீதியில் 97-வது இடத்தையும் பெற்றுள்ளார்.
இதேவேளை ஆசிரியர்களை தெய்வமாக போற்றி வணங்குவதன் மூலமே கல்வியில் சாதிக்க முடியும். எதிர்காலத்தில் சிறந்த பொறியியலாளராக மக்களுக்கு சேவையாற்றுவதே தனது நோக்கம் என யாழ்.மாவ ட்டத்தில் கணித பிரிவில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 3-ம் இடத்தையும் பெற்ற யாழ். இந்துக்கல்லூரி மாணவன் யதுசன் தெரிவித்தார்.
வர்த்தக பிரிவில் யாழ்.மாவட்ட ரீதியில் முதலிடத்தை பெற்ற யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவி நிதுஷா ஜெயக்குமார் கூறுகையில், என்போன்ற சக மாணவர்களின் கல்வி வழிகாட்டலுக்கு தன்னாலான உதவியை செய்வேன் என்றும் எதிர்காலத்தில் வங்கி முகாமையாளராக வருவது தான் இலட்சியம் அவர் தெரிவித்தார். வைத்தியசாலையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் அனைவருக்கும் சேவையாற்ற வேண்டும் என்பதே தனது எதிர்கால இலட்சியம் என்று யாழ்.மாவ ட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 6-வது இடத்தையும் பெற்ற யாழ். ஹாட்லிக் கல்லூரி மாணவன் தினேஷ் வலம்புரிக்கு தெரிவித்தார்.

No comments:
Post a Comment