November 14, 2013

லீனா மணிமேகலையின் கனவுப்பட்டறைத் தயாரிப்பான 'வெள்ளை வேன்' செய்திப்படம் இன்று வெளியாகிறது.(சானல் 4-ல் இன்று இரவு.)

அவர்கள் ராணுவப் பச்சை நிறத்தில் வருவார்கள். சிலநேரங்களில் சாதாரண மக்கள் போலவும் வருவார்கள்.

காரணமின்றியும், வாரண்ட் இன்றியும் உங்களை கழுத்தைப் பிடித்தும், காலரை இழுத்தும் தூக்கிக் கொண்டுபோவார்கள். உங்கள் விருப்பத்திற்கு மாறாக அடிமையைப் போல நீங்கள் போவீர்கள்.

உங்களுக்காக புலம்பும் உடைந்த இதயங்களை விட்டிவிட்டு நீங்கள் போகும் நிர்பந்தம் அது. அந்த உடைந்த இதயங்கள் எப்போதும் உங்களுக்காக காத்துக்கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் திரும்பவும் வரவே மாட்டீர்கள்.

கலக்கமுற்று, காய்ந்த நுரையீரலுடன் இரக்கமற்ற எதிர்களிடையே நீங்கள்.

நீங்கள் எங்கே என்று யாருக்கும் தெரியாது. சமுதாயத்தின் பதிவுகளில் இருந்து நீங்கள் விலக்கப்பட்டிருப்பீர்கள்.

நீங்கள் அதன் பின் வாழ்வதற்கு எதுவுமில்லை.

No comments:

Post a Comment