சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியமர்த்த கோரியும் வீடுகள் இடிப்பினை நிறுத்தக் கோரியும் வலி.வடக்கு மக்களின் தொடர் உணவு விடுப்புப் போராட்டம் மாவட்டபுரம் கந்தசாமி ஆலயத்திற்கு முன்பான சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பினையடுத்து கடந்த 23 வருடங்களாக தமது சொந்த நிலங்களை விட்டு வெளியேறிய வலி.வடக்கு மக்கள் தம்மை மீள்குடியமர்த்த வேண்டி 5தினங்களுக்கு தொடர் உண்ணாவிரத போராட்டத்தினை சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளனர். அதன்படி வலி.வடக்கின் 24 கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட 6382 ஏக்கர் நிலப்பரப்பு இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலையம் என்ற போர்வையில் விழுங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
.jpg)









No comments:
Post a Comment