இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதிமுக, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், உள்ளிட்ட 21 அமைப்புகள் இதற்கான அழைப்பினை விடுத்துள்ளன.
அன்றைய தினம் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சென்னையில் இன்று செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்த இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதே தினத்தில் வணிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள கடை அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இவர்கள், இலங்கை அரசுக்கு எதிரான இந்த போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் மாநில அரசு கைவிட வேண்டும் என்றும் இந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment