தமிழர்கள் பீதியுடன் வாழும்
நிலை உள்ளதாக கனடா தெரிவித்துள்ளது கனடாவின் சார்பில் பொதுநலவாய நாடுகள்
கொழும்பு மாநாட்டில் பங்கேற்ற அந்த
நாட்டின் வெளியுறவு அமைச்சின்
நாடாளுமன்ற செயலாளர் தீபக் ஒபராய்
இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் தொடர்ந்தும் மனித உரிமைகள்
மீறப்படுகின்றன. இதனை கருத்திற்
கொண்டே பிரதமர் ஸ்டீவன் ஹாப்பர்
கொழும்பு மாநாட்டை புறக்கணித்தார். அதற்கு பதிலாக இலங்கை சென்ற தாம் மத்திய அரசாங்கத்தால் மனித உரிமைகள்
மீறப்படுவதை கண்காணித்தாக குறிப்பிட்டார். அத்துடன் போரினால் இறந்துப்போன வடக்கின் பொதுமக்களுக்காக ஆணையிறவில்
மலரஞ்சலி செலுத்தியதாகவும் தீபக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment