October 21, 2013

இறக்குவானையில் சிவப்பு மழை

இறக்குவானை தெமுவாவத்த கிவுல்எல்ல பிரதேசத்தில் நேற்றுக் காலை சிவப்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
 
நேற்று காலை 6.45 மணியளவில் சுமார் 5 நிமிடங்கள் பெய்த மழையே சிவப்பு மழையாக பெய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
 
சிவப்பு மழையை சேகரித்த பிரதேசவாசிகள் இறக்குவானை பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து கிவுல்எல்ல கிராமத்திற்குச் சென்ற பொலிஸார் சிவப்பு மழை நீரைப் பெற்று பரிசோதனைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இதனைத் தொடர்ந்து கொடக்கவெல பொது சுகாதார பரிசோதகர் பிரிவும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment