போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.ஜம்மு காஷ்மீரின் ஆர்.எஸ்.புரா பகுதியில் இந்திய நிலைகளைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதனைத் தொடர்ந்து இந்திய தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில், இந்திய வீரர்கள் 2 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த நான்கு தினங்களில் மட்டும் 8 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 100க்கும் அதிகமான மேற்பட்ட முறை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.

No comments:
Post a Comment