யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை சந்தியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் மீது தாக்குதலை மேற்கொண்ட இனந்தெரியாதநபர்கள் பொலிஸார் ஒருவரை வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிசார் இருவர் இரவு 8 மணியளவில் ஆனைக்கோட்டைப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில ஈடபட்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பொலிசார் மறிக்க முற்பட்ட வேளையில் பொலிசாருக்கும் குறிப்பிட்ட நபர்களுக்கும் இடையே இடம்பெற்ற இழுபறியைத் தொடர்ந்து குறித்த நபர்கள் பொலிசாரை வாளால் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இச் சம்பவத்தில் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்தளையைச் சேர்ந்த வசந்த அபேயரத்தின வயது 37 என்பவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தெரடர்பில் எவரும் கைதுசெய்யப்படவில்லை. மானிப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment