இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வில் இந்திய பிரதமர் பங்கேற்பாரா என்பது தொடர்பில் இந்தியா இன்று சந்தேகத்தை தோற்றுவிக்கும் பதிலை வழங்கியுள்ளது.
வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், செய்தியாளர்களுக்கு தகவல் தருகையில்,
கொழும்பு மாநாட்டில் பங்கேற்குமாறு இலங்கை, இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
எனினும் இந்திய அரசாங்கம் இன்னும் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பிலான முடிவு பொதுநலவாய நாடுகளின் மாநாடு நடைபெறவிருக்கின்ற நாட்களை கிட்டிய வகையில் மேற்கொள்ளப்படும்.
இதன்போது வெளியுறவுக் கொள்கை. சர்வதேச மற்றும் உள்நாட்டு கரிசனைகள் கவனத்தில் எடுக்கப்படும் என்று சுஜாதா குறிப்பிட்டார்.
.jpg)
No comments:
Post a Comment