October 03, 2013

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு - இரண்டாம் இணைப்பு

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. பலர் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில்
காயமடைந்துள்ளதாக தற்போது வரும் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கட்டிடத்துக்குள் இருக்கும் பிபிசி செய்தியாளர் ஒருவர் நாடாளுமன்றக்
கட்டிடம் பாதுகாப்புக்காக மூடப்பட்டிருக்கிறது என்றும் , உள்ளே இருப்பவர்கள் ஜன்னல்களுக்கு அருகே வராமல் இருக்குமாறு கோரப்பட்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

No comments:

Post a Comment