தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், மாகாண சபை
உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் நாளை திங்கட்கிழமை அமெரிக்கா
பயணமாகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினில் யாழ். மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும்
வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் ஆகியோரே அமெரிக்கா
பயணமாகவுள்ளனர்.
அங்கு நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துக் கொள்ளும்
பொருட்டு அவர்கள் அமெரிக்கா செல்கின்றனர். இதன் போது அவர்கள் இந்த
நிகழ்வுக்கு மேலதிகமாக, அமெரிக்காவின் அரச உயர் அதிகாரிகளையும் சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின்
தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே வேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்
தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் அமெரிக்கா பயணமாகின்றார். புலம்பெயர்
தமிழர்களால் அமெரிக்காவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிகழ்வு ஒன்றில்
பங்குபற்றுவதற்காகவே இவர்கள் நாளை அங்கு பயணமாகவுள்ளனர்.
இதனிடையே தமிழகத்தினில் நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற திறப்பு விழாவிற்கும் கூட்டமைப்பின் தலைமைகள் பங்கெடுக்கவுள்ளன.

No comments:
Post a Comment