லங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கென கொழும்பு நகரை அலங்கரிப்பதற்கு மாத்திரம் 100 கோடி ரூபா செலவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மாநகர சபையின் நம்பகமான வட்டாரங்களிலிருந்தே இந்தத் தகவல் தெரியவருகிறது,
கொழும்பு மாநகர சபையினாலேயே இந்த அலங்கார வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை, தற்போது 80 கோடி ரூபாய்க்கான வேலைகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களை வரவேற்பதற்காக அமைக்கப்படும் வரவேற்பு அலங்காரப் பணிகளுக்கு மாத்திரம் 46 கோடி ரூபா செலவாகும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment