▼
September 05, 2013
ஜெனீவாவில் தீ குளித்தவர் இறந்துபோனார்: தமிழரா என்பதில் சந்தேகம்
நேற்றைய தினம்(05) அதிகாலை வேளை, ஜெனீவா ஐ.நா முன்றலில் தீ குளித்த நபர் இறந்துவிட்டதாக சுவிஸ் பொலிசார் தற்போது அறிவித்துள்ளார்கள். இவர் தமிழர் தானா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. இறக்கும் தறுவாயில் அவர் "தா .... " என்று சொல்லை உச்சரித்து இறந்துள்ளார். இவர் குறிப்பிட்டது தமிழீழத்தையா ? என்ற சந்தேகம் ஒரு புறம் இருக்க , இவர் அருகே இருந்து திபெத்திய ஆண்மீகத் தலைவர் தலேலாமாவின் படமும், புலிகளின் படமும் இருந்திருக்கிறது. தீயில் கருகியதால் இவரை அடையாளம் காண்பதில் பெரும் சிரமம் இருக்கிறது. இதேவேளை இறந்தவர் திபெத்தியராக இருக்கலாம் என்றும் அதனால் தான் அவர் தலேலாமா என்ற "தா" சொல்லை பாவிக்க முற்பட்டாரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது. எது எவ்வாறு இருப்பினும் அவர் அருகே இருந்த துண்டுப் பிரசுரங்களில் புலிகள் தொடர்பான மற்றும் திபெத் தொடர்பான புகைப்படங்கள் காணப்படுகிறது என்பது பொலிசாரால் உறுதிசெய்யப்படுகிறது. இதனால் பெரும் குழப்ப நிலை தோன்றியுள்ளது. முன்னர் தமிழர்கள் ஐ.நா முன்றலில் தீ குளித்தார்கள் என்பதனை உதரணமாக வைத்தே, இதுவும் தமிழராக இருக்கலாம் என்று பொலிசார் முதலில் சந்தேகப்பட்டார்கள். அவர் அருகே காணப்பட்ட துண்டுப் பிரசுரமும் சந்தேகங்களைக் கிளப்பியது என்று பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

No comments:
Post a Comment