September 30, 2013

விடுதலைப் புலிகளின் வீடியோ படங்களை கைத் தொலைபேசியில் வைத்திருந்த இளைஞர் கைது!


வாழைச்சேனை கல்குடா பொலிஸ் பிரிவில் விடுதலைப் புலிகளின் வீடியோ படங்களை தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பாசிக்குடா கடற்கரை பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி இளைஞனை கைது செய்துள்ளனர்.

பொலிஸாரைக் கண்டு ஓடிய இளைஞனை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதுடன், கையடக்கத் தொலைபேசியையும் சோதனை செய்துள்ளனர்.

இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் வீடியோக் காட்சிகளை தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த நிலையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பேத்தாழை விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய தவராசா ஜேசுதாசன் என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார்.

மேற்படி இளைஞனிடம் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment