இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அமர்வை நடத்துவதில் தீவிர கரிசனை நிலை ஏற்பட்டுள்ளதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அமர்வில் அவுஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக தாமும் பங்கேற்கவுள்ளமையை பிரித்தானியா பல இடங்களில் குறிப்பிட்டு வந்துள்ளது.
எனினும் தற்போது பிரித்தானியாவின் பொதுநலவாய அமைச்சர் ஹுகோ ஸ்வரே மாற்றுக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் கொள்கைகளையும் அர்ப்பணிப்புகளையும் பாதிக்கும் வகையில் இலங்கையில் மாநாட்டை நடத்தும் தீhமானம் அமைந்து விடக்கூடாது என்று ஸ்வயர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா, நியூயோர்க்கில் கடந்த வாரம் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் அமைச்சர் மட்டக் கூட்டத்தில் இந்த கருத்தை பிரித்தானிய அமைச்சர் வெளியிட்டார்.
.jpg)
No comments:
Post a Comment