September 14, 2013

1995 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட வாகனத்தில் இருந்த TNT வெடிமருந்தை 18 வருடங்களின் பின் கண்டுபிடித்த இலங்கை காவல்துறை

கொழும்பு, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றிலிருந்து 120 கிலோகிராம் நிறையுடைய ரீ.என்.ரீ ரக வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின்  நடவடிக்கைகளுக்கென பயன்படுத்தப்பட்ட வாகனம் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த 1995ஆம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட மேற்படி லொறி, கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் இதுவரை காலமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.



No comments:

Post a Comment