September 22, 2013

வடமாகாணத்தின் 14 தொகுதிகளையும் தமிழரசுக் கட்சி கைப்பற்றியது!!


இதுவரையில் வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் பிரகாரம் வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலுள்ள 14 தேர்தல் தொகுதிகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி தம்வசப்படுத்தியுள்ளது.

அத்துடன் ஐந்து மாவட்டங்களிலும் வெளியான தபால் மூல வாக்களிப்பிலும் தமிழரசுக் கட்சி முன்னணியில் இருக்கின்றது.

தமிழரசுக் கட்சியானது வடமாகாண சபைக்கான அத்தனை தொகுதிகளையும் வெற்றிகொண்டு வரலாற்று சாதனை புரிந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment