காணாமல்போனோர் விடயம் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் - நவநீதம்பிள்ளை
யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் காணாமல் போனோர் விடயம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும். காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன். என்மீது நம்பிக்கை வையுங்கள் என்று ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
வடபகுதியைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனோரைக் கண்டறியும் சங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே நவநீதம்பிள்ளை இந்த உறுதிமொழியினை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் செய்திருந்த ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று முற்பகல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகள் காரியாலயத்தில் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்தார்.
இந்த சந்திப்பில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் காணாமல் போனோரை தேடியறியும் சங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட 15 பேர் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட இந்த பிரதிநிதிகள் ஏழு மகஜர்களை நவநீதம்பிள்ளையிடம் கையளித்துள்ளனர்.
No comments:
Post a Comment