உயர்மட்ட சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சீனாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
ஜே.வி.பி. ஊடகப் பிரிவு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
சோசலிச கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்ட மாநாட்டில் சோமவன்ச அமரசிங்க பங்கேற்கவுள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றுக் கொண்டு சோமவன்ச அமரசிங்க சீனா விஜயம் செய்துள்ளார்.
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
பத்து நாட்கள் இந்த மாநாடு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment