காணி அமைச்சுக்கு சொந்தமான வாகனத்தை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தும் தென்பகுதி அரசியல்வாதிகள்: கபே கண்டனம்
காணி அமைச்சிற்குச் சொந்தமான வாகனத்தில் தோ்தல் பிரசார வேலைகளுக்குச் சென்று மாத்தளையில் மோதல் ஏற்படுத்தியமை தொடா்பாக ‘கபே’தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளர்கள் இருவருக்கு இடையில் அண்மையில் மாத்தளை நாவுல பிரதேசததில் இடம் பெற்றமோதலின் போது பயன்படுத்தப்பட்ட பெஜரோ ரக வாகனம் காணி அமைச்சுக்கு சொந்தமான வாகனம் என காணி அமைச்சின் செயலாளர் ஏற்றுக் கொண்டுள்ளதாக ‘கபே’ என்றழைக்கப்படும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
அதன் ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில், நாவுலையில் இடம் பெற்ற மோதலின் போது காணி அமைச்சரின் மகனான பாரமி த பண்டார தென்னகோன் மற்றும் திலக் பண்டார ஆகிய இருவருக்குமிடையில் இம்மோதல் இடம் பெற்றது.
இச்சம்பவம் தொடா்பாக கருத்து வெளியிடுகையில் கபே இயக்கம் தெரிவித்ததாவது-
காணி அமைச்சிற்கு ஒதிக்கிவுள்ள உத்தியோக பூர்வவாகனத்தை தனது மகனின் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவது தேர்தல் சட்டத்தை் மீறும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment