August 09, 2013

வெட்டு காயங்களுடன் பிக்குவின் சடலம் மீட்பு

79 வயது மதிக்கத்தக்க பிக்குவின் சடலமொன்று குருநாகலில் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. கலத்துட்டுவாகம பூரணரஜ மஹா விஹாரையின் பின்னாலிலிருந்தே இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கழுத்தில் வெட்டு காயங்கள் காணப்படுவதாக தெரிவித்த குருநாகல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment