வவுனியா பூவரசங்குளத்தில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்காக 12 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வேலங்குளம் பிரதேசத்தில் இருந்து மக்கள் வரவேண்டியிருக்கின்றது.இந்தப் பகுதியில் பொதுப் போக்குவரத்து வசதி கிடையாது. எனவே, இந்த வாக்காளர்களுக்கு உரிய போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் வாக்களிப்பதற்கு வரக் கூடியதாக இருக்கும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியா அரசாங்க அதிபர் தலைமையிலான கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்;. இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அரசாங்க அதிபர் இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment