தமிழர் பகுதிகளிலுள்ள படைகளை அகற்றுமாறு நவநீதம்பிள்ளை ஆணையிடவேண்டும் - பா.ம.க. ராமதாஸ்
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் நவநீதம்பிள்ளை தமிழர் பிரதேசங்களிலிருக்கும் படைகளை அகற்றுமாறு ஆணையிடவேண்டுமென பா.ம.க. நிறுவன ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் அறிக்கையொன்ரை வெளியிட்டுள்ளார்.
போர் முடிவடைந்து 4 ஆண்டுகள் முடிவடைந்து விட்ட நிலையிலும், திட்டமிட்டு இனப் படுகொலையை நடத்திய இனவாத இலங்கை அரசு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பத்தகுந்த வகையில் விசாரணை நடத்தும்படி இலங்கை அரசுக்கு ஆணையம் ஆணையிட்டது.
இந்த விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவநீதபிள்ளை நாளை முதல் ஒரு வாரத்திற்கு இலங்கையில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறார். நவநீதம் பிள்ளையின் பயணத்தால் தமிழர்களுக்கு ஓரளவாவது விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, இலங்கையில் நிலவும் உண்மையான சூழலை உலகிற்கு எடுத்துக் கூறவும், அதற்கு காரணமானவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரவும் இந்த பயணத்தை நவநீதம்பிள்ளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இது தொடர்பில் அவகேட்டுக்கொள்கிறேன்.
No comments:
Post a Comment