August 27, 2013

கூட்டமைப்பைச் சேர்ந்த பா.அரியநேத்திரன் எம்.பி. விசாரணைக்காக கொழும்பு 4ம் மாடிக்கு அழைப்பு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனை விசாரணைக்காக கொழும்பு 4ம் மாடிக்கு வருமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வாளர்களால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
புலனாய்வாளர்களின் இந்த அழைப்பாணை தொடர்பாக பா. அரியநேத்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைகளுக்காக வடக்கில் நிற்பதாகவும் இன்று தனது மட்டக்களப்பில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வாளர்கள், தனது குடும்பத்தாரிடம் சிங்களத்தினால் எழுதப்பட்ட அழைப்பாணை ஒன்றை வழங்கிவிட்டு, எதிர்வரும் 03.09.2013 ஆம் திகதி கொழும்பில் உள்ள 4ம் மாடிக்கு தன்னை விசாரணைக்காக வருமாறு கூறிவிட்டுச் சென்றதாகவும் தெரிவித்தார். இதேபோன்று 2008 ஆம் ஆண்டும் ஒரு தடவை புலனாய்வாளர்களினால் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment