மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறும் திகதியை நாளை நண்பகல் தாம் அறிவிக்க இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார் . தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது. சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லை இன்று நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது. மூன்று மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணி கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. 10 மாவட்ட செயலகங்களில் வேட்புமனுக்களை ஏற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனையொட்டி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment