நிறுவனங்களிலிருந்து தகவல் கசிவதை தடுக்கும் பொருட்டு மென்பொருளொன்றை டி.சி.எஸ். லங்கா நிறுவனம் இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சேப்டிகா எனப்படும் இப் புரட்சிகர மென்பொருளானது தரவுகள் கசிவதை தடுப்பது மட்டுமன்றி பல்வேறு நன்மைகளை அதனை உபயோகிக்கும் நிறுவனங்கள் மற்றும் அதன் முகாமைத்துவத்துக்கு வழங்குகின்றது.
செக்குடியரசில் உருவாக்கப்பட்ட இம்மென்பொரு ளானது தென் கிழக்காசிய நாடுகள் பலவற்றில் வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்டு வருகின்றது. இம்மென்பொருள் ஊழியர்களின் வினைத்திறன் முகாமைத்துவம் அறிந்து கொள்ள உதவுவதுடன் நிறுவனங்களில் உள்ள கணினிகளின் பாதுகாப்பையும் கண்காணிக்கின்றது.
இதன்மூலம் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு தனித்தனி கணினியும் கண்காணிக்கப்படுகின்றது. மேலும் நிறுவனத்தின் ஊழியர்கள் தமது தனிப்பட்ட மின்னஞ்சல், பென்டிரைவ், டெப்லட் கணினிகள் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் நிறுவனத்தின் தகவல்களை எடுத்துச் செல்கின்றாரா என சேப்டிகா கண்டுபிடிக்கக்கூடியது.
அவ்வாறான தரவு பரிமாற்றம் இடம்பெறுமெனின் செப்டிகா அது தொடர்பில் நிர்வாகிக்கு அறியத்தந்து உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வழி செய்கின்றது. இதன் மூலம் நிறுவனங்ளின் கணினிகளிலிருந்து தரவுகள் கசிவது ஊடுருவல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை போன்றன குறிப்பிடத்தக்களவு குறைக்கப்படுகின்றன.
இதன்மூலம் சமூக வலைத்தளங்கள் கேமிங் அப்ளிகேஷன்கள் ஆகியன முற்றாக தடுக்கப்படப் போவதில்லை எனினும் நிர்வாகிகள் தமது ஊழியர்கள் செயற்பாட்டைக் கட்டுப்படுத்தும் வசதியை சேப்டிகா வழங்குகின்றது. இதன் மூலம் முகாமைத்துவமும் ஊழியர்களின் வினைத்திறனை உறுதி செய்து கொள்ள முடியும்.
மனிதத்தவறுகள் மூலம் தரவுகள் கசிவதிலிருந்து நிறுவனங்களை பாதுகாக்கும் ஒரே மென்பொருளாக சேப்டிகா திகழ்கின்றது. இது தவிர டிவைஸ் மேனேஜ்மன்ட் டேடா என்கிரிப்சன் எக்டிவிட்டி பிள்டரிங் புளக்கிங் போன்ற பல வசதிகளை சேப்டிகா வழங்குகின்றது.
No comments:
Post a Comment