அரசாங்கத்தை எதிர்க்கும் திறமை ஐ.தே.க.விடம் இல்லை : சரத் மனமேந்திர
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படாத சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்கவோ அல்லது அரசாங்கத்தை கவிழ்க்கவோ ஒருபோதும் முடியாதென நவ சிஹல உறுமயக் கட்சியின் தலைவர் சரத் மனமேந்திர தெரிவித்தார்.
எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு இயக்கதினால் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆளும் கட்சியில் இருந்து பலர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாகவும் அரசாங்கம் அவர்களுக்கு கொடுக்கும் அழுத்தங்களின் காரணமாகவுமே அவர்கள் மறுப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி கூறி வருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் இக் கருத்தானது முற்றிலும் பொய்யானது. ஐக்கிய தேசியக் கட்சியில் எவ்வித நிரந்தர கொள்கையொன்று இல்லாமையும் அரசாங்கத்தை எதிர்க்கும் தன்மை இல்லாமையுமே அவர்கள் இணையாமைக்கான முக்கிய காரணம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment